தமிழகத்தில் ஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கலாம் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசு வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிய உள்ள நிலையில் இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,
தமிழ்நாடு கொரோனா பாதிப்பில்இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பது கவலையளிக்கிறது. குறிப்பாக அடுத்த 2 வாரங்கள் இன்னும் சவால் நிறைந்ததாக இருக்கும என்று வல்லுநர்கள் எச்சரித்துவருகின்றனர்.
மக்களை முழுமையாக காப்பாற்ற தேவைப்பட்டால் ஏப்ரல் 14-க்குப் பிறகு மேலும் ஓரிரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்கலாம். ஆனால், அப்படி அமல்படுத்துவதற்கு முன்பாக தமிழக அரசு கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சையிலும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளைச் சரியான திட்டமிடுதலோடு செய்வதிலும் உரிய கவனம் செலுத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…
சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…
மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு…
சென்னை : விடாமுயற்சி படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.…