மாரி தாசுக்கு அறிவாலயத்தின் நெருக்கடி…! அறிவாலயத்திற்கு சட்டம் தந்தது சவுக்கடி…! – அண்ணாமலை

Default Image

தமிழக அரசு வாய்மையில் இருந்து தவறி பொய்மை பாதையில் நடப்பதை மன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். 

மாரிதாஸ் கைது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘வாய்மையே வெல்லும்… இது தமிழக அரசின் முத்திரை வாசகம். ஆனால் தமிழக அரசு வாய்மையில் இருந்து தவறி பொய்மை பாதையில் நடப்பதை மன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது. அறிவாலய திமுக அரசு தலைகுனிய, வாய்மை மீண்டும் வென்றிருக்கிறது.

சாமானிய மக்களின் சத்தியத்தின் மீதான நம்பிக்கைக்கு கடைசி புகலிடமாக இருந்து கொண்டிருப்பது நீதிமன்றம் மட்டுமே. ஜனநாயகத்தின் இன்றியமையாத இரும்புத் தூணாக இருந்து கொண்டிருப்பது நீதி மன்றங்களே. இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த போது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்ததாக சிறந்த தேசியவாதியும், வலதுசாரி சிந்தனையாளரான திரு.மாரிதாஸ் மீது தொடரப்பட்ட  வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை.

இந்தத் தீர்ப்பு நேசியவாதிகளின் கருத்து சுதந்திரத்திற்கு கடிவாளம் போட நினைத்த அறிவாலய அரசுக்கு அறிவு சொல்லும் பாடமாக அமைந்துவிட்டது. மாரிதாஸ் அவர்கள் கடந்த டிசம்பர் 9ஆம் தேதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணத்தையொட்டி கருத்து தெரிவித்த போது அதில் தமிழ்நாடு காஷ்மீராக மாறி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

திரு மாரிதாஸ் அவர்கள் குறிப்பிட்டதில் என்ன தவறு இருக்கிறது என்று தான் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது நான் வலியுறுத்திக் கூறியிருந்தேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான இந்த கைதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டித்திருந்தது. அதே கருத்தைத்தான் தற்போது நீதியரசரும் தற்போது உறுதி செய்திருக்கிறார். தேசிய வாதிகளின் கருத்து சுதந்திரத்திற்கு பாரதிய ஜனதா கட்சி என்றும் பாதுகாவலாக இருந்துகொண்டிருக்கிறது.

திருமாரிதாஸ் அவர்களை காவல்துறை கைது செய்ய முயன்றபோது 50க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள், தங்கள் எதிர்ப்பினை அரசுக்கு அமைதியாக தெரிவித்தனர். அவர்கள் மீதும் காவல்துறை வழக்கு தொடுத்து இருக்கிறது. சட்டத்துக்குப் புறம்பாக தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று திரு மாரி நாஸ் அவர்களும் நீதிமன்றத்தின் கதவினைத் தட்டியிருந்தார்.

அந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “சுப்பிரமணிய சுவாமியும் இது போன்ற கேள்வியை எழுப்பயிருந்தாரே, அவர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டதா, ஜெயலலிதா மரணத்தின் போதும் இதுபோன்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டனவே” என்று கேட்டிருக்கிறார். அனைத்துத் தரப்பினர் வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாரிதாஸ் மீது தொடுக்கப்பட்ட சட்டப் பிரிவுகள் 153 A (ஜாதி, மத, இனங்களுக்குள் முாண்பாடு ஏற்படுத்தும் வகையில் பேச்சாலும் எழுத்தாலும் செய்கையாலும் தூண்டி விடுதல்) 504 (தனது கருத்தால் அல்லது பதிவால் சமூகத்தில் பிரச்னை ஏற்படும் என தெரிந்தே பதிவிடுதல்), 505 ( ii ) (ஜாதி, மத, இன வேறுபாடு ஏற்படுத்தி பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் தூண்டி விடுதல்), 505 ( |) ( b ) {பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டது செல்லாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்த வழக்கில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை திருப்திப்படுத்துவதற்காக, அவசரம் அவசரமாக ஏதோ ஒரு சட்டப் பிரிவில் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறை DGP காட்டிய முனைப்பை அவசரத்தை, நானும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கண்டித்து இருந்தேன்.

மாண்புமிகு நீதிபதி அவர்கள் காவல்துறை பயன்படுத்திய சட்டப்பிரிவுகள் செல்லாது என்று கண்டித்தது. காவல்துறையின் அவசரகோலத்தின் செயல்பாட்டை அடையாளப்படுத்தி விட்டது. மேலும் ஒருதலைப்பட்சமாக சட்டத்தை பயன்படுத்தி எதிர்ப்பாளர்களை அச்சுறுத்த முயற்சி செய்யவும் அறிவாலயத்தின் நடவடிக்கைகளுக்கு இந்த தீர்ப்பு… சட்டம் தந்த சவுக்கடி, இனியேனும் ஆட்சியில் இருக்கிறோம் என்ற மமதையில் சட்டத்தை தன் இஷ்டத்திற்கு பயன்படுத்த அறிவாலய திமுக அரசு முயற்சிக்காது என்று நம்புவோம்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்