Breaking News:யூடியூப்பில் டிரெண்டாகி வந்த நிகழ்ச்சிக்கு – நீதிமன்றம் தடை
இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் டிக் – டாக் செயலிக்கு தடை விதித்து உள்ளது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
பிராங்க் ஷோ என அழைக்கப்படும் குறும்பு வீடியோ நிகழ்ச்சிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவு.மேலும் குறும்பு வீடியோக்களை படமாக்கவும் ,தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும் தடை விதித்து உள்ளது.
பிராங்க் ஷோ போன்ற நிகழ்ச்சிகள் தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாகவே கூறப்படுகிறது.மேலும் டிக் – டாக் தமிழ் மியூசிக்கலி போன்ற செயலிகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்கும் முன்பாக அரசே தடை விதிக்க வேண்டும் .
இதன் மூலமாக குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் மனநிலை பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் டிக் டாக் செயலிக்கு தடை கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு விட்டு உள்ளது.இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் டிக் – டாக் செயலிக்கு தடை விதித்து உள்ளது என கூறியுள்ளனர்.