கோவை : ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல்.! மருவாக்கு எண்ணிக்கைக்கு ஆணை.!
கோவையில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை மறுஎண்ணிகை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது கோவை மாவட்டம், பெரிய நாயக்கபாளையம் ஒன்றியத்தில் உள்ள சின்ன தடாகம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், முதலில் திமுக வேட்பாளர் சுதா வெற்றிபெற்றார் என அறிவிக்கப்பட்டு, இறுதியில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சவுந்தர வடிவு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவை எதிர்த்து, திமுக வேட்பாளர் சுதா, கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், மீண்டும் அந்த தேர்தல் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். அதற்கு தகுந்த குழு அமைத்து, அதனை முறையாக வீடியோ பதிவு செய்து 15 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.