சூரப்பா நீடிப்பதை எதிர்த்த வழக்கு- தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் சூரப்பா நீடிப்பதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து வருபவர் சூரப்பா.இவர் மீது ஊழல் புகார் எழுந்த நிலையில் அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் ,அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் பதவியில் சூரப்பா நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.மேலும் அவரது மனுவில், பல்கலைக்கழகத்தின் மானிய குழு விதிகளுக்கு எதிராக துணைவேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.உரிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிவித்து இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.