மணக்கோலத்தில் சென்று கொரோனா நிவாரண நிதி வழங்கிய தம்பதியினர்….!
மணக்கோலத்தில் சென்று கொரோனா நிவாரண நிதி வழங்கிய தம்பதியினர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்ற நிலையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது, மேலும் சுபநிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விலாப்புறம் மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள ஒரு கோவிலில் ஹரிபாஸ்கர்- சாருமதி என்ற தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர். மிகவும் எளிய முறையில் இந்த திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், தம்பதியினர் தங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தில் 50 ஆயிரத்தை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து, உயர்கல்வி அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்கு சென்று தம்பதியினர் இந்த நிவாரண நிதியை வழங்கியுள்ளனர். நிவாரண நிதியை பெற்றுக் கொண்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி புதுமண தம்பதிகளை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.