சந்தானம் ஸ்டைலில் ஒரே வீட்டை பலருக்கு குத்தகைக்கு விட்டு பண மோசடி செய்த தம்பதி.!

Default Image

ஒரே வீட்டை பலரிடம் குத்தகைக்கு விட்டு பண மோசடி செய்த தம்பதி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையை அப்துல்காதர் குத்தகைக்கு வீடு தேடி வந்துள்ளார். அப்போது ஆன்லைனில் ரவி-அமுதா தம்பதியினர் தங்களது வீட்டை லீசுக்கு விடுவதாக கூறிய விளம்பரத்தை கண்டு செல்போனில் தொடர்பு கொண்ட அப்துல்காதர் வீட்டை பிடித்து கொண்டதால் குத்தகைக்கு 15 லட்சம் ரூபாய்க்கு பேசி முடித்துள்ளார். அதனையடுத்து ரூ. 8 லட்சத்தை முதல் தவணையாகவும், ரூ. 7லட்சம் ரூபாயை இரண்டாம் தவணையாகவும் அந்த தம்பதியரிடம் ஜனவரி மாதத்தில் கொடுத்து ஒப்பந்தம் செய்துளளனர்.

ஆனால் அதனையடுத்து பல மாதங்கள் கழிந்த பின்னரும் வீட்டை ஒப்படைக்காமல் சாக்கு போக்கு சொல்லி கொண்டிருந்த தம்பதியரிடம் குத்தகையை ரத்து செய்து விட்டு பணத்தை திருப்பி தரும்படி அப்துல்காதர் கேட்டுள்ளார். அதனையடுத்து அப்துல்காதரை மிரட்ட தொடங்கிய ரவி-அமுதாவின் மீது வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதனையடுத்து நடந்த விசாரணையில் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு தியாகராயநகர் பகுதியில் தலைமறைவாகி இருந்த ரவி-அமுதாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ஒரே வீட்டை பலரிடம் குத்தகைக்கு விடுவதாக கூறி 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்வது தெரியவந்துள்ளது. மேலும் வீட்டை கேட்டு வருபவர்களிடம் சாக்கு போக்கு சொல்லி மிரட்டியும் வந்துள்ளனர். தற்போது இவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சேகரித்து வருவதோடு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்