அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக அதிமுக ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரனிடம் தம்பதியர் தகராறில் ஈடுபட்டனர்.
கோயமுத்தூரை சேர்ந்த ஒருவர், கல்லூரி விரிவுரையாளர் பணிக்காக கோபிசெட்டிபாளையம் ஒன்றிய அதிமுக செயலாளர் சிறுவலூர் மனோகரனிடம் 2 ஆண்டுக்கு முன் ரூ.15 லட்சம் கொடுத்துள்ளார். வேலை கிடைக்காததால் பல முறை பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் ஒன்றிய செயலாளர் மனோகரன் பணத்தை தராமல் ஏமாற்றியதை தொடர்ந்து, ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தனது மனைவி மற்றும் 6 வயது மகன், ஒன்றரை வயது கைக்குழந்தைகளுடன் கோபிசெட்டிபாளையத்திற்கு வந்தார்.
அப்போது, கோபிசெட்டிபாளையம் யூனியன் அலுவலகத்தில் இருந்த அமைச்சர் செங்கோட்டையனிடம் இது குறித்து புகார் அளிக்க முயன்றார். அமைச்சரை சந்திக்க நிர்வாகிகள் அனுமதிக்காததால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மற்றும் அவரது மனைவி ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த பெண் தான் அணிந்து இருந்த தாலியை கழற்றி வீசி ஏறிய முயன்றார். இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் அறைக்குள் தம்பதியரை அழைத்துச்சென்று சமரசம் செய்யும் முயற்சியில் ஒன்றிய அதிமுக செயலாளர் மனோகரன் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே அப்பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர் அறைக்கதவு, ஜன்னலை மூடினர். மனோகரன் முன்தேதியிட்ட காசோலையை அந்த நபரிடம் வழங்கியதை தொடர்ந்து தம்பதியர் அங்கிருந்து சென்றனர். இதேபோல், யூனியன் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்காக நஞ்சை கோபி கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் மனைவி லதா என்பவரிடம் ஒரு ஆண்டுக்கு முன் ரூ.2 லட்சத்தை ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரன் பெற்றுள்ளார். ஆனால் லதாவிற்கு பணி வாங்கி தரவில்லை பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் லதா தனது கணவர் சேகருடன் நேற்று யூனியன் அலுவலகத்தில் இருந்த ஒன்றிய செயலாளர் சிறுவலூர் மனோகரனிடம் பணத்தை கேட்டு தகராறு செய்தார். அதிமுக ஒன்றிய செயலாளர் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்ததாக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அமைச்சர் முன்னிலையில் தகராறு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…