நாட்டின் முதல் கடற்பசு பாதுகாப்பகம் தமிழகத்தில் அமைகிறது – தமிழ்நாடு அரசு
பாக். விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க அறிவிக்கை வெளியிட்டது தமிழக அரசு.
தஞ்சை, புதுக்கோட்டை கடலோர பகுதிகளை உள்ளடக்கிய பாக். விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக பாக். நீரிணையில் 446 சதுர கீ.மீ பரப்பளவை கடற்பசு பாதுகாப்பகமாக அறிவித்தது தமிழக அரசு. நாட்டிலேயே முந்தமுறையாக தமிழகத்தில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படுவது பெருமைக்குரியது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடற்பசு இனங்களை பாதுகாப்பதனால் கடல் பகுதிகளுக்கு அடியில் உள்ள கடற் புற்கள் பாதுகாக்கப்படும்.
வளிமண்டல கார்பனை அதிகளவில் நிலைப்படுத்த கடற்பசு காப்பகம் உதவும் என்றும் கடல்புல் படுகைகள் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏதுவாக மேம்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது 240 கடற்பசுக்கள் மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான கடற்பசுக்கள் தமிழ்நாட்டின் கடற்பகுதிகளில் காணப்படுகிறது. கடற்பசுக்கள் வாழ்விடங்களை அழிவில் இருந்து பாதுகாக்க வேண்டிய உடனடி தேவை எழுந்துள்ளது.
இந்த நிலையில், உள்ளூர் மீனவர்களுடன் ஆலோசித்து கடற்பசு பாதுகாப்பகம் அமைப்பது தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடற்பசு பாதுகாப்பகம் அமைப்பதால் கடலோர வசிக்கும் எவ்வித கட்டுப்பாடோ, நிபந்தனையோ விதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றான கடற்பசுவை பாதுகாக்கும் வகையில், பாக். விரிகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.