நாட்டின் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு வருகிறது-ஈவிகேஎஸ் இளங்கோவன்
நாட்டின் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு வருகிறது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் சார்பில் சிதம்பரத்தின் கைதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, ஜெயக்குமார் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன்பேசுகையில், நாட்டின் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு வருகிறது .வேலை இல்லாமல் இளைஞர்கள் தவித்து வருகின்றனர் பெரிய நிறுவனங்கள் தற்போது மூடும் நிலை ஏற்பட்டுள்ளது பொருளாதாரம் வீழ்ச்சி நடைபெற்று வருகிறது.காங்கிரஸ் கட்சியை அவமானப்படுத்தும் வகையில்தான் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரம் கைதை தொடர்ந்து ராகுல் காந்தி பிரியங்கா காந்தி மீது பாஜகவினர் வழக்கு போட்டுள்ளனர்.ஜம்மு காஷ்மீர் பிரச்சனை பாஜக வெற்றிகரமாக சாதித்து விட்டோம் என்று நினைக்கிறார்கள் ஆனால் ஜம்மு காஷ்மீர் பிரச்சனை விளைவு ஏற்படும் அபாயம் உள்ளது.
பிரதமர் மோடி நீதித்துறையை ராணுவம் காவல்துறை அவர் கையில் வைத்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறா.ர் சட்டத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும் .நீதித்துறை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை .நீதித்துறை பிஜேபி அடிமையாக செயல்பட்டு வருவது போல் தெரிகிறது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.