நாட்டின் 76வது குடியரசு தினம் – தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை: இன்று 76-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே, பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அவரைப்போல முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், த.வெ.க.தலைவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது “எண்ணற்ற வீரர்களின் தியாகத்தால் விளைந்த சுதந்திர இந்தியாவில், அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்ட, தனி அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட தினமான இந்தக் குடியரசு தினத்தில், அதற்கு வித்திட்ட தியாகிகளை நினைவுகூர்ந்து, அனைவருக்குமான சம உரிமை மற்றும் சமூக உரிமைகள் கிடைத்திட. அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறுதியேற்போம்” என பதிவிட்டுள்ளார்.
— TVK Vijay (@tvkvijayhq) January 26, 2025
மேலும், குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் 8 மணிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதைப்போல, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லி ராஜ்பாத் (கடமைப் பாதை) பகுதியில் கொடியை ஏற்றி குடியரசு தினவிழாவை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.