நீட் நுழைவு தேர்வில் இருந்து நாட்டிற்கு விடுதலை கிடைக்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை திருவான்மியூரில் அமைச்சர் கே.என்.நேரு-வின் சகோதரர் மறைந்த ராமஜெயத்தின் மகனின் திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார்.
நீட் தேர்வில் இருந்து விடுதலை
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர், நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து நாட்டுக்கு விடுதலை கிடைக்கும். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.