கீழடியில் ரூ.12.21 கோடி செலவில் அமைக்கப்படுகிறது – முதலமைச்சர் பழனிசாமி
ரூ12.21 கோடியில் கீழடி அகழாய்வு பொருட்களை கொண்டு உலக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கீழடி ஆராய்ச்சியின் மூலம் தமிழர்களின் பண்பாடு மற்றும் பெருமையும் உலகளவில் பிரபலமாகி வருகிறது.இதனை தொடந்து அங்கு சுற்றுலாவிற்காக பல தரப்பினரும் வந்து சென்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு நாள் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், சிவகங்கை திருப்புவனம் அருகே உள்ள கொந்தகையில் ரூ12.21 கோடியில் கீழடி அகழாய்வு பொருட்களை கொண்டு உலக அருங்காட்சியகம் அமைக்கப்படும்.கீழடி அகழாய்வு தமிழர் நாகரீகத்தை உலகிற்கே பறைசாற்றியுள்ளது என்று தெரிவித்தார்.