மாநகராட்சி தூங்குகிறதா? சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
மாநகராட்சி தூங்குகிறதா? என்று மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை உயநீதிமன்றத்தில் வடபழனி கட்டட தீ விபத்து வழக்கு, விசாரணை நடைபெற்றது. உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் இந்த விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,கட்டடம் இடிக்கப்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் முழுவிவரங்கள் இல்லை.சென்னை மாநகராட்சி தூங்குகிறதா? என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.