நீதிபதியை கூடை பின்னும் தொழிலாளியாக மாற்றிய கொரோனா வைரஸ்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தான் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் அருகே புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி புரிந்து வந்தவர் உத்தமகுமரன். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸின் தீவிர பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் சிறிய வழக்குகளில் வாதாடும் வக்கீல்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அந்தவகையில், மாதம் 25 ஆயிரம் வரை சம்பாதித்த உத்தமகுமாரனுக்கு, ஊரடங்கு உத்தரவிற்கு பின் எந்த வருமானமும் இல்லாததால், அவரது குடும்ப கஷ்டத்தின் நிமித்தம், அவரகள் மூதாதையர் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த கூடை பின்னும் தொழிலை செய்துள்ளார். இதன் மூலம் அவருக்கு வாரம் ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை லாபம் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வழக்கறிஞர் உத்தமகுமாரன் குறித்து ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தி பார்த்த, சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, பி.ஆர். ராமசந்திர மேனன் என்பவர் ரூ.10,000 காசோலையை பரிசாக அனுப்பி வைத்துள்ளார். மேலும், இது இரக்கத்தினால் கொடுக்கப்படும் நன்கொடை அல்ல எனவும், மாறாக உங்களை பாராட்டுவதற்காக கொடுக்கப்படும் பரிசு எனவும் தெரிவித்து ஒரு கடிதமும் அனுப்பியுள்ளார்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…