நீதிபதியை கூடை பின்னும் தொழிலாளியாக மாற்றிய கொரோனா ஊரடங்கு!

Default Image

நீதிபதியை கூடை பின்னும் தொழிலாளியாக மாற்றிய கொரோனா வைரஸ்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தான் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் அருகே புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில்  வழக்கறிஞராக பணி புரிந்து வந்தவர் உத்தமகுமரன். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸின் தீவிர பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் சிறிய வழக்குகளில் வாதாடும் வக்கீல்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அந்தவகையில், மாதம் 25 ஆயிரம் வரை சம்பாதித்த உத்தமகுமாரனுக்கு, ஊரடங்கு உத்தரவிற்கு பின் எந்த வருமானமும் இல்லாததால், அவரது குடும்ப கஷ்டத்தின் நிமித்தம், அவரகள் மூதாதையர் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த கூடை பின்னும் தொழிலை செய்துள்ளார். இதன் மூலம் அவருக்கு வாரம் ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை லாபம் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வழக்கறிஞர் உத்தமகுமாரன் குறித்து ஆங்கில நாளேட்டில் வெளியான செய்தி பார்த்த, சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, பி.ஆர். ராமசந்திர மேனன் என்பவர் ரூ.10,000 காசோலையை பரிசாக அனுப்பி வைத்துள்ளார். மேலும், இது இரக்கத்தினால் கொடுக்கப்படும் நன்கொடை அல்ல எனவும், மாறாக உங்களை பாராட்டுவதற்காக கொடுக்கப்படும் பரிசு எனவும் தெரிவித்து ஒரு கடிதமும் அனுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்