கூலி தொழிலாளர்கள் போல மாறுவேடத்தில் சென்று கஞ்சா வியாபாரியை மடக்கி பிடித்த போலீசார்!
கூலி தொழிலாளர்கள் போல மாறுவேடத்தில் சென்று பெண் கஞ்சா வியாபாரியை மடக்கி பிடித்த போலீசார்.
நாடு முழுவதிலும் கஞ்சா வியாபாரிகள் மற்றும் சிறுவயதிலேயே கஞ்சாவுக்கு அடிமையாகியவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு வியாபாரிகளும் நூதனமான முறையில் மறைமுகமாக கஞ்சாவை விற்பனை செய்து கடத்தி கொண்டுதான் இருக்கின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
எனவே அந்த இடத்திற்கு மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளர்கள் போல வேடமிட்டு மாறுவேடத்தில் சென்றிருந்த போலீசார் வேடசந்தூர் அண்ணா நகர் பகுதியில் கஞ்சா விற்று வந்த வசந்தா எனும் பெண் வியாபாரியிடம் கஞ்சா வாங்குவது போல நடித்து உண்மையைக் கண்டறிந்தனர். அதன்பின் அந்தப் பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து தற்பொழுது ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு வேறு ஏதேனும் கஞ்சா வியாபாரிகள் உடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.