கோவை சிறுமி கொலை குற்றவாளிக்கு கொடுத்த தண்டனை வரவேற்கத்தக்கது – விஜயகாந்த்.!
- கோவை சிறுமி வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு தூக்கு தண்டனையை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று வழங்கியது.
- குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள பன்னிமடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி 7 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டு இருந்தார் .அப்போது அந்த சிறுமி காணாமல் போனார். இதை தொடர்ந்து அந்த சிறுமியின் தயார் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை இதை தொடர்ந்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையெடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். பின்னர் 27-ம் தேதி அந்த சிறுமியின் வீட்டின் அருகே சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மார்ச் 31-ம் தேதி அதே பகுதியை சார்ந்த சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கு கோவையில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பின்னர் இந்த வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
நேற்று கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் சந்தோஷ்குமாரை குற்றவாளி என கூறி, போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும் , 302 பிரிவின் கீழ் குற்றவாளி தூக்கு தண்டனையும் மற்றும் தடயத்தை மறைந்ததுக்காக 7 வருடம் சிறையுடன் ,ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டு தண்டனை வழங்கியது .
இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சந்தோஷ்குமாருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த தீர்ப்பை வழங்கிய போக்சோ நீதிமன்றத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்கும் வகையில் ஒரு நல்ல தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது என கூறியுள்ளார்.