தூத்துக்குடி அனல் மின் நிலைய ஊழியர்கள் போராட்டம்.. கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை தொடரும்.?
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தூத்துக்குடி என்எல்சி அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி என்எல்சி அனல் மின் நிலையத்தில் (NTPL) 250க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து என்எல்சி முன்பு தற்போது போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பல வருடங்களாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றுபவர்களுக்கு நிரந்தர பணி, அரசு விடுமுறை நாட்களில் உரிய விடுமுறை, முறையான வசதிகளுடன் கேன்டீன்மற்றும் கழிவறை வசதி, தீபாவளி , பொங்கல் போனஸ் அதுபோக குறிப்பிட்ட உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
நெய்வேலி அனல் மின் நிலைய ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.