தொடரும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம்..! பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்..!
28 மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்
சமீப காலமாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பலமுறை கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட, 28 மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை சிறையில் வாடும் 28 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைந்து விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.@narendramodi அவர்களுக்குக் கடிதம்.#CMMKSTALIN #TNDIPR pic.twitter.com/RuYy7stSTy
— TN DIPR (@TNDIPRNEWS) March 23, 2023