தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்..! தமிழக மீனவர்கள் 7 பேர் கைது..!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கற்படை.
சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்று 7 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் அவர்களது விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு கைது செய்யப்பட்ட மீனவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.