திமுக எம்.எல்.ஏ & எம்பிக்கள் புறக்கணிக்கப்படுவது கண்டனத்துக்குரியது – கனிமொழி
திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பிக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது கண்டனத்துக்குரியது – கனிமொழி
தருமபுரியில் முதல்வர் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில் அம்மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த மனுவை அளிக்க சென்ற திமுக எம்.பி. செந்தில் குமாருக்கு அழைப்பிதழ் வழங்கவில்லை என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தியதால் திமுக எம்.பி. செந்தில்குமார் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதுகுறித்து முக ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அரசு விழா மற்றும் ஆய்வுக்கூட்டங்களில் திமுக MP & MLA -களை தொடர்ந்து புறக்கணித்துவரும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழகமெங்கும் நடக்கும் அரசு விழா மற்றும் ஆய்வுக் கூட்டங்களில் திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பிக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது கண்டனத்துக்குரியது என்று திமுக மக்களவை உறுப்பினர், மகளிரணிச் செயலாளர் கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகமெங்கும் நடக்கும் அரசு விழா மற்றும் ஆய்வுக் கூட்டங்களில் திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பிக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது கண்டனத்துக்குரியது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 21, 2020