வினாத்தாள் வெளியான விவகாரம்: வழக்கில் ஒப்பந்த ஊழியர் கஞ்சனா கைது…!
அண்ணா பல்கலைக்கழக கணித வினாத்தாள் வெளியான வழக்கில் ஒப்பந்த ஊழியர் கஞ்சனா கைது செய்யப்பட்டார்.
அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது.டிசம்பர் 3 ஆம் தேதி முதலாம் ஆண்டிற்கான 2-ம் பருவ கணக்கு தேர்வு நடைபெற்றது. இதில், வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் விசாரணை நடத்தியது .
பின் வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்ததால் டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக கணிதத் தேர்வு ரத்து செய்தது. தேர்வு மீண்டும் டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது. மரைன் பொறியியல் மாணவர்களை தவிர மற்ற மாணவர்கள் டிசம்பர் 12 ஆம் தேதி மறுதேர்வை எழுத வேண்டும் என்றும் தெரிவித்தது.தொடர்ந்து அன்று தேர்வு நடந்து முடிந்தது.
பின் தேர்வு வினாத்தாள் வெளியான வழக்கில் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.பொறியியல் பட்டதாரிகள் சுரேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் அண்ணா பல்கலைகழகத்தின் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கேள்வித்தாளை விற்பனை செய்தவர் அண்ணா பல்கலைகழகத்தின் தற்காலிக ஊழியர் காஞ்சனா என தெரிவிக்கப்பட்டது.
மேலும் தலைமறைவாகவுள்ள காஞ்சனாவை தேடும் பணியில் சிபிசிஐடி போலீஸ் தீவிரமாக்கினர்.இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக கணித வினாத்தாள் வெளியான வழக்கில் ஒப்பந்த ஊழியர் கஞ்சனாவை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.