இரவில் ரூ.80 கோடி பணத்துடன் நடுரோட்டில் நின்ற கண்டெய்னர் லாரி..!!பரபரப்பில் ஆம்பூர்..!!
ஆம்பூர் அருகில் ரூ.80 கோடி பணத்துடன் நடுரோட்டில் கண்டெய்னர் லாரி திடீரென பழுதாகி நின்றது. இந்நிலையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருக்கும் ஒரு தனியார் வங்கிக்கு இரண்டு கண்டெய்னர் லாரிகள் மூலம் ரூ.80 கோடி பணமானது இன்று மாலை கொண்டு செல்லப்பட்டது. இந்த பணத்துடன் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் பணியில் 22 போலீஸார் உடன் சென்ற நிலையில் சென்னை முதல் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்ட ஆம்பூரை கடந்து கண்டெய்னர் லாரிகள் இரண்டும் சென்றுகொண்டிருந்த நிலையில் ஆம்பூரை அடுத்த செங்கலிகுப்பம் பகுதியில் லாரிகள் சென்றபோது முன்னால் சென்ற ஒரு கண்டெய்னர் லாரியானது திடீரென்று பழுதாகி நடுரோட்டில் நின்றது.
இந்நிலையில் முதல் கண்டெய்னரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு லாரியானது திடீரென்று நிறுத்தப்பட்டது.மேலும் நின்ற லாரியின் பழுதுக்கு என்ன காரணம் என்று தெரியாததால் சுதாரித்த கொண்ட பாதுகாப்புப் பணி போலீஸார் உடனடியாக அலர்ட் ஆகி நின்றிருந்த கண்டெய்னர்களைச் சுற்றி வளைத்து துப்பாக்கி ஏந்தி கேடயமாக நின்றனர்.