தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் ரத்து!

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் ரத்து.
தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில், கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மருத்துவத்துறை மற்றும் பொதுத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடத்த நாளை தான் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் சிலர் இன்று கூட்டம் நடைபெறுகிறது என்று செய்திகள் வெளியிட்டு விட்டு, பின்னர் ரத்து என திருத்தம் செய்து வெளியிடுவதாக தெரிவிக்கின்றன எனவும் தலைமைச் செயலக வட்டாரத்தில் தெரிவித்தாக கூறப்படுகிறது.