மார்ச் 3ல் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் – தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ்
நாளை கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், மார்ச் 3ல் காங்கிரஸ் கட்சியுடனான 2ம் கட்ட பேச்சுவார்த்தை – திமுக
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு நாளை மறுநாள் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டுராவ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு திமுக, காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் திமுக சொன்னதை விட கூடுதல் தகுதிகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டது, இதில் 8 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுருந்தது. இந்த முறை 25 தொகுதிக்குள் ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதில் சிலர் கூறுகையில் 22 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளை 234 தொகுதிகளுக்கு திமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்திகிறார்கள். தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ளதால், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்ய திமுக ஈடுபட்டு வருகிறது. அதன்படி, நாளை கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், மார்ச் 3ல் காங்கிரஸ் கட்சியுடனான 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.