விவசாய விரோத மோடி அரசை இந்திய மக்களின் துணையோடு காங்கிரஸ் கட்சி துடைத்தெறியும்- ஜோதிமணி எம்.பி
விவசாய விரோத மோடி அரசை இந்திய மக்களின் துணையோடு காங்கிரஸ் கட்சி துடைத்தெறியும்.
உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் இன்று அதிகாலை பன்வீர்பூர் கிராமத்திற்கு சென்றார். அப்போது போலீசார், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து, எம்.பி. ஜோதிமணி அவர்கள் ட்விட்டர் பக்கத்தில், பாஜக அமைச்சரின் மகனால் படுகொலை செய்யப்பட்ட விவ்சாயிகளுக்கு ஆதரவாக போரட்டக் களத்திற்குச் சென்ற பிரியங்கா காந்தியை மோடி அரசு தடுப்புக்காவலில் வைத்துள்ளது. இதே போல விவாசாய விரோத மோடி அரசை இந்திய மக்களின் துணையோடு காங்கிரஸ் கட்சி துடைத்தெறியும்.
பாஜகவால் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும்,இந்த தேசம் வாக்குச் சீட்டில் பழிதீர்க்கும். விவசாயிகளுக்காக அந்த யுத்தத்தை காங்கிரஸ் கட்சி முன்னின்று நடத்தும்.’ என பதிவிட்டுள்ளார்.
பாஜகவால் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும்,இந்த தேசம் வாக்குச் சீட்டில் பழிதீர்க்கும். விவசாயிகளுக்காக அந்த யுத்தத்தை காங்கிரஸ் கட்சி முன்னின்று நடத்தும்.#PriyankaGandhi
— Jothimani (@jothims) October 4, 2021