ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி, மோடி பிரிவினரை இழிவுபடுத்தியதாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
ராகுல்காந்தி சஸ்பெண்ட் :
மக்கள் பிரதிநிதிகள் சட்டப்பிரிவு படி, 2 அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் சிறை தண்டனை பெற்றால் அவர் மக்கள் பிரதிநிதி பொறுப்பில் இருக்க முடியாது என்பதை சுட்டிக்காட்டி, ராகுல்காந்தியை வயநாடு மக்களவை தொகுதி எம்பி பதவியில் இருந்து நாடாளுமன்ற சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி , எதிர்க்கட்சியினர் பலரும் தங்கள் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தனர்.
ரயில் மறியல் :
ராகுல்காந்தி தகுதிநீக்க நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை காங்கிரஸ் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 15) பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்தனர்.
சென்னை – சேலம் :
அதன்படி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் முக்கிய தலைவர்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் போராட்டத்தில் ஈடுப்பட்ட 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அடுத்து சேலத்தில் ரயில் மறியல் ஈடுபட்ட 150க்கும் மேற்ப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
ரயில் மறியல்கள் :
புதுக்கோட்டையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போல, தமிழகம் முழுவதும் சுமார் 70க்கும் மேற்பட்ட இடஙக்ளில் ரயில் மறியல் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…