நாகர்கோவிலில் காங்கிரஸ் – பாஜக தொண்டர்கள் மோதல்.! காங்கிரஸ் கட்சி கண்டனம்.!
நாகர்கோவிலில் காங்கிரஸ் – பாஜக தொண்டர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாஜக – காங்கிரஸ் தாக்குதல் :
இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக மாறியது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் கண்டனம் :
இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் :
அகில இந்திய காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், நாகர்கோவிலில் அமைதியாக இருந்த காங்கிரஸ் தொண்டர்கள் மீது பாஜக ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை தாக்குதலானது, ஜனநாயகம் மற்றும் போராட்ட சுதந்திரத்தின் மீதான தாக்குதல் ஆகும். என விமர்சித்தனர்.
நடவடிக்கை தேவை :
மேலும், இந்த கொடூரமான வன்முறைச் செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் மற்றும் விரைவான நடவடிக்கையைக் கோருகிறோம். என்றும் காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
The violent attack on peaceful Congress workers in Nagercoil, Tamil Nadu, by BJP supporters is an attack on democracy and the freedom to protest.
We strongly condemn this heinous act of violence and demand swift action. pic.twitter.com/8QrWzQCezb
— Congress (@INCIndia) April 4, 2023