மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் சச்சின் சிவாவை பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துனர் ராஜா சஸ்பெண்ட்.
மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவா சென்னையில் இருந்து மதுரை செல்வதற்காக அரசு பேருந்து ஒன்றில் ஏறி உள்ளார். அப்போது சச்சின் சிவாவை அந்த பேருந்தின் கண்டக்டர் ராஜா என்பவர் இந்த பஸ்ஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை என மறுத்ததோடு, அவரை அவமரியாதையாக பேசியதாக கூறப்படுகிறது.
மேலும், போலீசார் முன்பதாகவே நீ மதுரைக்கு வா பார்த்துக் கொள்ளலாம் என ராஜா பகிரங்கமாக மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மற்றொரு பேருந்து மூலமாக சச்சின் சிவா மதுரை வந்துள்ளார். பின், மாட்டுத்தாவணியில் உள்ள எஸ்இடிசி மண்டல விசாரணை அலுவலகத்தில் ராஜா மீது புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் ராஜா உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சச்சின் சிவா அவர்கள் கூறுகையில், தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு இது போன்ற நிலை தான் காணப்படுகிறது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக தான் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…