“நூறு ஆண்டுகளைத் தாண்டி நிற்கும் கருத்து; அந்தக் கருத்தின் பெயர் பெரியார்” – மநீம தலைவர் கமல்ஹாசன்…

Default Image

ஒடுக்கப்பட்டோருக்காகவே சிந்தித்த, செயல்பட்ட பெரியாருக்கு 143 என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இன்று தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியிருந்தார்.அதன்பின்பு முதல்வர் ஏற்கனவே அறிவித்தபடி தந்தை பெரியாரின் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அதன்படி,இன்று பலரும் பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அனுசரித்து வருகின்றனர்.இந்நிலையில்,மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்,பெரியாரின் நினைவு நாளை நினைவு கூர்ந்துள்ளார். மேலும்,இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“சாதிச் சழக்குகளுக்கும் மதவெறிக்கும் எதிராக ஒரு கருத்து நூறு ஆண்டுகளைத் தாண்டி ஊறு படாமல் நிற்கிறதெனில் அந்தக் கருத்தின் பெயர் பெரியார். ஒடுக்கப்பட்டோருக்காகவே சிந்தித்த, செயல்பட்ட பெரியாருக்கு 143. வணக்கத்தோடு நினைவு கூர்கிறேன்”,என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்