சமுதாய தடுப்பூசியான முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வந்த நிலையில், இதனை தடுக்க தடுப்பு மருந்துகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இங்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கு தொற்று ஏற்படுவதால் மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், தடுப்பூசி போட்டு 14 நாட்களுக்கு பின் தான் உடலில் முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். பலர் தடுப்பூசி போட்ட பின்பு முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர். எனவே சமுதாய தடுப்பூசியான முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…