தமிழக ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்று வருகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்று வருகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அள்ளிக்கவில்லை. குறிப்பாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ரவி கையெழுத்திடவில்லை.
தொடர்ந்து தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என்றும், மத்திய அரசுக்கு சாதகமாக அவர்கள் கூறுவதற்கு மட்டும் செயல்படுகிறார் என்றும், அதனால் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரணி நடைபெற்று வருகிறது.
இந்த பேரணியை சைதாப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் டி.ராஜா தலைமை தாங்கி நடத்தி வருகிறார். அவர்களுக்கு சைதாப்பேட்டை பனகல் மாளிகை வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேரணியில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…