பயிருக்கு பாதுகாப்பாய் இருக்க வேண்டிய, வேலியே பயிரை மேயச்சொன்ன கதை போல நடந்துகொண்ட கல்லூரி பேராசிரியை..!

Published by
Dinasuvadu desk

விருதுநகர் மாவட்டம் அருகே அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா, கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைத்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்த கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலா. இவர் தேர்வுத்தாள் திருத்தும் பணிக்காக காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு சென்று வருவது வழக்கம். அப்படி சென்ற போது, அங்குள்ள உயர் பொறுப்பில் உள்ளவர்கள் கல்லூரி மாணவிகளை படுக்கைக்கு அழைத்து வந்தால் 85 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்களுடன் , பணமும் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளதாக கூறி 4 மாணவிகளிடம் நிர்மலா ஆசைவார்த்தை கூறிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மாணவிகள் தங்களுக்கு விருப்பமில்லை என்றும், இது பற்றி பேசவேண்டாம் என்றும் மறுப்பு தெரிவித்த பின்னரும் விடாமல் அவர்களை நிர்ப்பந்தப்படுத்தும் விதமாக 19 நிமிடம் பேசி இருக்கிறார்  தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா..!

இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகாரை கல்லூரி நிர்வாகம் கிடப்பில் போட்ட நிலையில், புரோக்கர் போல பேசிய பேராசிரியையின் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியதால், பேராசிரியை நிர்மலாவை 15 நாள் சஸ்பெண்ட் செய்துள்ளது கல்லூரி நிர்வாகம். மாணவிகளிடம் பேசியதை ஒப்புக்கொண்டுள்ள நிர்மலா, தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் அந்த கல்லூரியில் படிக்கின்ற மற்ற மாணவிகளின் பெற்றோரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

பேராசிரியை நிர்மலா, மாணவிகளுடன் நடத்திய இந்த உரையாடலின் பின்னணியில் இருக்கின்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகள் யார் என்பதை கண்டறிந்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

Recent Posts

மீண்டும், மீண்டுமா? உ.பி-க்கு ரூ.31 ஆயிரம் கோடி! தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே!

மீண்டும், மீண்டுமா? உ.பி-க்கு ரூ.31 ஆயிரம் கோடி! தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே!

சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…

18 minutes ago

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

1 hour ago

வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…

1 hour ago

காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!

சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…

2 hours ago

“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்”…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

2 hours ago

விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக சந்திக்கிறார் விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…

3 hours ago