முடிவுக்கு வந்த பனிப்போர்.! போக்குவரத்துறைத்துறை – காவல்த்துறை கைகுலுக்கி சமாதானம்.!
சென்னை: கடந்த சில தினங்களாக போக்குவரத்து ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் இன்றுடன் நிறைவடைந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், நாகர்கோவிலில் இருந்து நாங்குநேரி வழியாக தூத்துக்குடி செல்லும் பேருந்தில், நாங்குநேரி நீதிமன்ற பஸ் ஸ்டாப்பிற்கு அடுத்த ஸ்டாப்பில் காவலர் ஒருவர் சீருடையுடன் ஏறினார். அவரிடம் நடத்துனர் டிக்கெட் கேட்ட பொழுது எடுக்க மறுத்து தான் அரசு ஊழியர் அரசு பணிக்காக செல்கிறேன் என கூறியுள்ளார். காவலர் வாரண்ட் இருந்தால் மட்டுமே இலவசமாக பயணிக்க முடியும் என நடத்துனர் அவரிடம் கூறியுள்ளார் இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சில நிமிடங்கள் பஸ் நிறுத்தப்பட்டு பின்னர் ஒரு காவலர் சமாதானம் செய்து, காவலருக்கு டிக்கெட் எடுக்கப்பட்டு மீண்டும் பேருந்து இயக்கப்பட்டது.
காவலருக்கும், நடத்துனருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்தை அடுத்து, அரசு பேருந்துகள் மீது போக்குவரத்து காவலர்களின் நடவடிக்கை சற்று கடுமையானது. அரசு பேருந்து எல்லை கோட்டை தாண்டி நிற்பது, நோ பார்க்கிங்கில் அரசு பேருந்து நிற்பது, ஓட்டுனர்கள் சீட் பெல்ட் அணிவதில்லை, அதிகளவு பயணிகள் ஏற்றி செல்கின்றனர் என பல்வேறு வழக்குகள் அரசு பேருந்துகள் மற்றும் ஓட்டுனர்கள் மீது பதியப்பட்டன.
தாம்பரம், சென்னை, நெல்லை என பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்து வந்தது. இதனை அடுத்து , இன்று சம்பந்தப்பட்ட இரு அரசு ஊழியர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசி அதனை வீடியோவாக வெளியிட்டு இனி போக்குவரத்து துறையும், காவல்துறையும் சமாதானமாக செல்வோம் என கூறி இந்த இரு அரசு துறைகளுக்கு இடையேயான பிரச்னையை சரி செய்துள்ளனர்.
Police and conductor compromised. ✌️ pic.twitter.com/tVAz9SsU9A
— Iyan Karthikeyan (@Iyankarthikeyan) May 25, 2024
இருவரும் பேசி கொண்டதில், இருவரும் அவரவர் கருத்தை அன்று கூறினோம். பிறகு நீங்கள் (காவலர்) டிக்கெட் எடுத்து பயணித்தீர்கள். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தவறாக பதியப்பட்டுவிட்டது. இனி இரு துறையும் சமாதானமாக அவரவர் துறை வேலைகளை செய்வோம் என பேசினர். அதே போல , கடந்த சில தினங்களாக அரசு பேருந்துகள் மீது போக்குவரத்துறை