கோவை:இரு தினங்களுக்கு ட்ரோன் கேமரா பறக்க தடை விதித்து கோவை மாநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவையில் நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் இருப்பதால் இரு தினங்களுக்கு கோவை நகரில் ட்ரோன் கேமரா பறக்க தடை விதித்து கோவை மாநகர காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக,கோவை மாநகர காவல்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
“வருகின்ற 22.11.2021 மற்றும் 23.11.2021 ஆகிய தேதிகளில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கோவை வருகையையொட்டி கோவை மாநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ட்ரோன் கேமரா(Drone camera) சாதனங்கள் பறப்பதற்கு மேற்படி தினங்களில் தடைவிதிக்கப்படுகிறது என்பதை கோவை மாநகர காவல் சார்பாக பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது”,என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…