தமிழக கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்..!வானிலை ஆய்வு மையம்
தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் ,வரும் 15, 16ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யும்.மீனவர்கள் நாளை தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளுக்கும், நாளை மறுதினம் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் .வரும் 15-ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்று மாலைக்குள் கரை திரும்ப வேண்டும்
என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.