நடுக்கடலில் சந்தேகப்படும்படியாக படகு நின்றதாலும், அதனை முன்னேறவிடாமல் தடுக்கவே படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கடலோர காவல்படையினர் சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது .
நேற்று நள்ளிரவு மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர் .
இந்த துப்பாக்கி சூட்டில் வீரவேல் எனும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் குண்டடி பட்டு காயமுற்றார். இவருக்கு ராமநாதபுரத்தில் முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, துப்பாக்கி குண்டை அகற்றுவதற்கும், மேற்சிகிச்சைக்கும் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மீனவர் வீரவேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இது குறித்து இந்திய கடலோர காவல்படையினர் விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது, சம்பந்தப்பட்ட படகு நடுக்கடலில் சந்தேகப்படும்படியாக நின்றது. அதனை சோதனைக்காக நிறுத்த கூறினோம். ஆனால், அவர்கள் நிறுத்தவில்லை.
அவர்களை முன்னேறவிடாமல் தடுக்கவே துப்பாக்கியால் சுட்டோம். அதில் தவறுதலாக வீரவேல் மீது குண்டடி பட்டது. உடனே ஹெலிகாப்டர் உதவியுடன் நடுக்கடலில் இருந்து ராமநாதபுரம் கொண்டு சென்றோம் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறோம் எனவும் கூறப்பட்டுள்ளது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…