ரூ.23.78 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விடுதிகள்,பள்ளிகள் – திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!

Published by
Edison

சென்னை:தமிழகத்தின் சில மாவட்டங்களில் ரூ.23.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிகள் மற்றும் பள்ளிக் கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்துள்ளார்.

தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த 23 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை தலைமைச்செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 23 கோடியே 78 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டிடங்கள் மற்றும் 3 பள்ளிக் கட்டிடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்துள்ளார்.

அதன்படி,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் 2 கோடியே 44 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், வல்லத்தில் 1 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் 2 கோடியே 38 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், கோட்டூர் மற்றும் நன்னிலத்தில் தலா 1 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 5 ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதிக் கட்டிடங்கள்; நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆகிய இடங்களில் தலா 1 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 ஆதிதிராவிடர் பள்ளி மாணவியர் விடுதிக் கட்டிடங்கள்,

மேலும்,திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 1 கோடியே 26 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டிடம்; திருச்சி மாவட்டம் செங்காட்டுப்பட்டியில் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருப்பத்தூர் மாவட்டம் அத்தனாவூரில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 2 பழங்குடியினர் பள்ளி மாணவ, மாணவியர் விடுதிக் கட்டிடங்கள்; நாமக்கல் மாவட்டம் செங்கரையில் 1 கோடியே 54 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிக் கட்டிடம், நாமக்கல் மாவட்டம் செங்கரையில் 3 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் நீலகிரி மாவட்டம் மு.பாலாடாவில் 1 கோடியே 23 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டிடங்கள் என மொத்தம் 23 கோடியே 78 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கே.விவேகானந்தன், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் வி.சி.ராகுல், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

Recent Posts

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

23 minutes ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

2 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

3 hours ago

ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!

குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…

3 hours ago

“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!

சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…

4 hours ago

INDvsAUS : 14 ஆண்டு பழிதீர்க்குமா இந்தியா? பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்ரேலியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…

4 hours ago