இயந்திரத்தில் சிக்கி கை துண்டான தற்காலிக துப்புரவு பணியாளர் தன்னை கருணை கொலை செய்ய அனுமதி கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள வடக்கு தெருவில் வசித்து வருபவர் ரேவதி. பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். கொரோனா ஊரடங்கின் மீது நுண் உரம் செயலாக்க மையத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு மக்கும் உரங்களையும், மக்காத உரங்களையும் பிரித்தெடுத்து அதனை இயந்திரத்தில் மாற்றி வேலை செய்து கொண்டிருந்த போது அவரது கை இயந்திரத்தில் சிக்கி துண்டானது.
உடனடியாக தஞ்சையிலுள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சில நாட்களில் வீட்டில் இருந்து ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் அவர் வேலையில்லாமல் தனது இரண்டு குழந்தைகளுடன் வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் , எனவே தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அரசு அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எனவே தன்னை கருணை கொலை செய்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கூறி மனு ஒன்றை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். இவரது இந்த நிலையை கண்டு பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேலும் வலுப்பெற்று,…
சென்னை : அடுத்த ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டில் எந்தெந்த நாட்களில் ரேஷன்…
சென்னை : ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று தாக்கல்…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (17-12-2024) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்…
சென்னை : உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கு, இன்று சென்னை…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன செஸ் வீரர் டிங் லின்னை தோற்கடித்து…