குடிமராமத்து திட்டம் சிறப்பாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது – முதலமைச்சர் பழனிசாமி.
குடிமராமத்து திட்டம் சிறப்பாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நேற்று முதலமைச்சர் பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன் பின்னர் அவர் பேசுகையில், விவசாயிகளின் பங்களிப்போடு குடிமராமத்து திட்டம் சிறப்பாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 40 ஆயிரம் ஏரிகள் மற்றும் குளம், குட்டைகள் உள்ளது.அனைத்து ஏரிகளும் தூர்வாரப்பட்டு, வண்டல் மண்ணை விவசாய நிலத்துக்கு பயன்படுத்தி வருகிறோம்.
குடிமராமத்து பணிகள் சிறப்பாக செயல்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது .வீணாகும் தண்ணீரை சேமிப்பதற்காக தடுப்பணைகள் கட்டும் திட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 42698 வீடுகளுக்கு ரூ.45.50 கோடி மதிப்பில் குடிநீர் இணைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.