பானிபூரி குருமாவில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த குழந்தை..!

தஞ்சையில் பானிபூரி குருமாவிற்குள் விழுந்து 2 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே செட்டிமண்டபம் ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அனுசுயா தங்களது வீட்டு வாசலில் பானிபூரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ரிஷி என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி அனுசியா பானி பூரி குருமா தயார் செய்து அந்த ஒன்றில் சூடாக கீழே இறக்கி வைத்துள்ளார். அதன்பின் அவர் மற்ற வேலைக்கு சென்ற பின் அந்த அருகில் கவனிக்க ஆள் இல்லாத நேரத்தில் அவ்வழியே வந்த குழந்தை ரிஷி விளையாடியபடி தவறி விழுந்துள்ளார். இதனால் படுகாயமுற்ற குழந்தை சத்தம் கேட்டு தாய் ஓடி வந்த நிலையில் அவரை அம்மா சமுத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பானிபூரி குருமாவிற்குள் விழுந்து குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ,திருவிடைமருதூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!
February 26, 2025
AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…
February 26, 2025
“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!
February 26, 2025