கோவை : திமுகவின் முப்பெரும் விழா இன்று கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறவிருக்கும் திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்நிலையில், கோவை வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை நடத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, தேர்தலில் வெற்றியை தேடி தந்த மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக திமுக சார்பில் கோலாகலமாக நடைபெறுகிறது.
முப்பெரும் விழாவில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் என அனைவரும் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் முத்துச்சாமி அங்கே இருந்து அனைத்தையும் கவனித்து வருகிறார். மேலும் இந்த விழாவில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்னால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்துள்ள 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், இந்தியாக் கூட்டணிக்கு 40க்கு 40 எனும் மகத்தான வெற்றி மூலம் ஜனநாயகத்தை பாதுகாக்க துணைநின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றி போல, 2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் இடம்தான் இந்த கோவை முப்பெரும் விழா என்று முன்னதாக திமுக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…