முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.347,76,15,440 நன்கொடை

Default Image

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை  ரூ.347.76 கோடி பெறப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பின் காரணமாக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.இதேபோல் பிரதமர் மோடியும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.அதன்படி பல தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு, நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை ரூ.347,76,15,440  என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.மேலும் மனமுவந்து நிதியுதவி அளித்த அனைத்து நிறுவனங்கள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்