மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்..!என்ன தேவைப்பட்டால் அதை செய்ய அரசு தயார் -முதலமைச்சர் ..!
திருச்சி அருகே உள்ள நடுக்காட்டுபட்டியில் இரண்டு வயது சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 05.40 மணிக்கு விழுந்தான். குழந்தையை மீட்கும் பணி 73 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி , எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டறிந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் “நடுக்காட்டுபட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் காப்பாற்றுவதற்கான மீட்பு முயற்சிகள் குறித்து நரேந்திர மோடிக்கு விளக்கம் அளித்தேன். மேலும் அங்கு நடக்கும் மீட்பு பணிகளும் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் என்.டி .ஆர். எஃப் மற்றும் எஸ் .டி .ஆர். எஃப்எஸ் உடன் மூன்று அமைச்சர்களும் உள்ளனர்.
மேலும் அந்த இடத்தில் நடைபெறும் மீட்புப் பணிகளுக்காக பெரிய ரக துளையிடம் இயந்திரம் மற்றும் சாதனங்கள் துறை வல்லுனர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை தவிர மீட்பு பணிககளுக்கு வேறு என்ன தேவைப்பட்டால் அதை செய்வதற்கு தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.