முதலமைச்சர் விமர்சனம்… பேரவையில் இருந்து பாதியில் வெளியேறிய ஆளுநர்!
தமிழ்நாடு அரசால் தயாரித்து அச்சிடப்பட்ட உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் குற்றசாட்டு.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் ஆர்என் ரவி உரையுடன் தொங்கியது. அப்போது, தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆளுநர் உறையற்றினார். இந்த சமயத்தில், ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின் ஆளுநர் தனது தொடர்ந்து உரையாற்றி தனது உரையை நிறைவு செய்தார்.
திராவிட மாடல் மற்றும் தமிழ்நாடு என்ற வார்த்தையை ஆளுநர் தவிர்த்துவிட்டு பேசியதாக குற்றச்சாட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி முறையாக படிக்கவில்லை என குற்றசாட்டினார்.
ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்த நிலையில், அவரை கண்டித்த முதல்வர் பேசியதால் ஆளுநர் வெளியேறினார். அரசு தயாரித்த ஆளுநர் உரையின் பகுதியை மட்டுமே பேரவை ஆவணங்களில் பதிவேற்ற வேண்டும் என முதல்வர் பேசியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் சில விமர்சனங்களை முன்வைத்தபோது பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி.
ஆளுநர் வெளியேறும் போது வாழ்க தமிழ்நாடு என திமுக எம்எல்ஏக்கள் முழக்கம் எழுப்பினர். இதன்பின் பேசிய முதல்வர், ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன் எங்கள் எதிர்ப்பு எதையும் பதிவு செய்யவில்லை. ஆளுநருக்கு முழு மரியாதை கொடுத்து கண்ணியத்தோடு நடந்து கொண்டோம் எனவும் தெரிவித்தார்.