பொருளாதார ஆலோசனை குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை!
பொருளாதார ஆலோசனை குழுவுடன் 3வது முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.
பொருளாதார ஆலோசனை குழுவுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பொருளாதார ஆலோசனை குழுவுடன் நடத்தினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
குழுவின் ஆலோசனைகள் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு, நிதி மேலாண்மைக்கு உதவும் என முதல்வர் தெரிவித்துள்ளார். வரும் 20ம் தேதி தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், புதிய திட்டங்கள் பற்றி ஆலோசனை வழங்குமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் காணொளி மூலம் நடந்த ஆலோசனையில் பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர்கள் எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.