தொகுப்பூதியத்தை உயர்த்துவது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார் – அமைச்சர் அன்பில் மகேஷ்
தொகுப்பூதியத்தை உயர்த்தலாமா என நிதிநிலையை பொறுத்து முதலமைச்சரின் அலுவலகம் தான் முடிவு செய்யும் என அமைச்சர் தகவல்.
தமிழ்நாட்டில் உள்ள CBSE, ICSE பள்ளிகளையும் ஆய்வு செய்ய உள்ளேன் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பள்ளிகளில் Right, Left உள்ளிட்ட எந்த இரு கருத்தியலும் நுழையக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. LKG, UKG வகுப்புகளுக்கு நியமிக்கப்பட உள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்துவது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார்.
இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களின் செயல்பாடுகள் பிரமிப்பை ஏற்படுத்துவதால், அவர்களே LKG, UKG வகுப்புகளுக்கு பொருத்தமானவர்களாக இருப்பார்கள். Montessori பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பதில் தன்னார்வலர்களை தேர்வு செய்வது ஏன்? என்ற கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார்.
பள்ளிகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், மின்சாதனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கல்வித் தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்கும் ஒப்பந்தப்புள்ளியில் முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.