நாளைக்குள் கஜா புயல் சேதம் குறித்த அறிக்கையை முதல்வர் மத்திய அரசுக்கு அளிப்பார்…! துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் கஜா புயல் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது திருவாரூரில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் 203 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.அதிகாரிகள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர்.புயல் பாதித்த இடங்களில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க, ஜெனரேட்டர் வசதி செய்து தரப்பட்டுள்ளது, விரைவில் குடிநீர் பிரச்சினை தீரும்.டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளைக்குள் கஜா புயல் சேதம் குறித்த முழுமையான அறிக்கையை தயார் செய்து, முதல்வர் மத்திய அரசுக்கு அளிப்பார் என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.