விடுதலைப் போராட்ட வீரர்களான மருது பாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் சிலைகளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்.
சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் சிலைகள் இன்று திறக்கப்படுகிறது. சுதந்திர போராட்ட தியாகிகளின் மார்பளவு சிலைகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மருதுபாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த பொலிவூட்டப்பட்ட செக்கு, வ.உ.சி.யின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களுக்கு ரூ.34 லட்சத்திலும், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ரூ.18 லட்சத்திலும், ரூ.43 லட்சத்தில் வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த செக்கு பொலிவூட்டப்பட்ட சிலையும், அவரது மார்பளவு சிலையும் நிறுவப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக சுதந்திர போராட்ட தியாகிகளின் சிலைகளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். மேலும், பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிலைகள் நிறுவ அடிக்கல் நாட்டுகிறார்.
டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை…
சென்னை : விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும்…
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…